Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச.)
வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேசப் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இதன் காரணமாக வடக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 60 கிலோமீட்டர் வேகம் வரையிலும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கதேசம், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளில் கடலோரத்திலும், கடலுக்கு அப்பால் உள்ள பகுதிகளிலும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வடக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதுடன், கடல் கொந்தளிப்பாக முதல் மிகக் கொந்தளிப்பாகவும் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், வடக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளிலும், வங்கதேசம் முதல் மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளிலும் மீனவர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ