Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச.)
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு அடுத்த மாதம் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பாகியுள்ளது.
இந்த இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகம் இன்று காலை 11 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய் தலைமையில் கட்சியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்த இடைத்தேர்தலை தவெக மிக முக்கியமானதாக கருதுவதாக கூறப்படுகிறது. முதல் தேர்தல் களமாக இந்த இடைத்தேர்தலை சந்திக்க உள்ளதால், வேட்பாளர் தேர்வில் கட்சித் தலைமை தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில், அதிமுகவில் இருந்து சமீபத்தில் விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்ட மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோருக்கு இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
களப்பணி மற்றும் சமூக செல்வாக்கை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் இது உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b