Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 10 செப்டம்பர் (ஹி.ச.)
வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேற்றைய தினம் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், முதற்கட்டமாக பருவமழை காலங்களில் பெய்யும் மழை நீரை தேக்கி வைக்கும் வகையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்கள், குட்டைகளை தூர்வாரி தண்ணீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறையினருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவு பிறப்பித்த நிலையில், தற்போது உடனடியாக தூர்வாரும் பணியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, வி.பி.ஜி. ராம்.ஜி திட்ட பணியாளர்கள் மூலம் தற்போது இந்த பணிகளானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளங்கள், கால்வாய்கள் மற்றும் குட்டைகளை தூர்வாரி தண்ணீரானது எந்த வித தடையின்றி செல்லவும், தண்ணீர் வீணாகாமல் சேமிக்கவும் தற்போது பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN