Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 10 செப்டம்பர் (ஹி.ச.)
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக முடிவு செய்துள்ளது.
இந்த முடிவின் அடுத்தகட்டமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவை கோரும் முயற்சியில் அக்கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சலீம், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆனந்தை நேரில் சந்தித்து கடிதம் அளித்துள்ளார். அந்தக் கடிதத்தில், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு அளிக்க வேண்டும் என்று முறைப்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் விரைவில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்க உள்ள நிலையில், புதுச்சேரியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தனது கோரிக்கையை வலுப்படுத்த தமிழகத்தில் ஆட்சியில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவையும் நாட முடிவு செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b