Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச.)
பயணிகளின் வசதிக்காக திருவனந்தபுரம் சென்ட்ரல் – தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரயில் எண் 06110 திருவனந்தபுரம் சென்ட்ரல் – தாம்பரம் சிறப்பு ரயில் புதன்கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலின் சேவை செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 28, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ரயில் எண் 06109 தாம்பரம் – திருவனந்தபுரம் சென்ட்ரல் சிறப்பு ரயில் வியாழக்கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலின் சேவை செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 29, 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் திருவனந்தபுரம் – தாம்பரம் இடையே பயணிக்கும் பொதுமக்களுக்கு கூடுதல் ரயில் சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ