ஸ்டாலின் வீடியோவுக்கு த.வெ.க. ஐடி விங் பதிலடி - சிறை சென்ற தியாகி என்ற போலி பிம்பம் உடைந்துவிட்டதாக விமர்சனம்
சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச.) மிசா சிறை அனுபவம் குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வெளியிட்ட வீடியோவுக்கு பதிலடியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் எக்ஸ் தளத்தில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது. பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட
Tvk


Bb


சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச.)

மிசா சிறை அனுபவம் குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வெளியிட்ட வீடியோவுக்கு பதிலடியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் எக்ஸ் தளத்தில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட சிறை சென்ற தியாகி என்ற போலி பிம்பம் உடைந்ததால் பதற்றம் பற்றிக்கொண்டுள்ளதாக விமர்சித்துள்ள த.வெ.க. ஐடி விங், எதை உலகறியக் கூடாது என மறைத்து வைத்திருந்தார்களோ அது அம்பலமானதால் அச்சம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நீண்ட நேரம் பேசியும் தடுப்புக் காவல் ஆவணம் குறித்து மட்டும் மு.க.ஸ்டாலின் பேசவில்லை என்றும் அக்கட்சி விமர்சித்துள்ளது.

உண்மைக்கு விளம்பரங்களோ விளக்கங்களோ தேவையில்லை என குறிப்பிட்டுள்ள த.வெ.க. ஐடி விங், தற்போது காணொளி வெளியாகியுள்ள நிலையில், அதில் பல வெட்டுக்கள் இருப்பதாகவும், உணர்வற்ற பேச்சுடன் மீண்டும் உண்மைக்கு மாறான ஒன்றை நம்ப வைக்க முயற்சிக்கும் படுதோல்வி முயற்சியாகவே இது தெரிகிறது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், கட்டுக்கதைகளால் கட்டமைக்கப்பட்ட பொய்யான பிம்பம் மெய்யைத் தாக்குப்பிடிக்காது என்பதை இன்று வெளியான காணொளி நிரூபித்துள்ளதாகவும் த.வெ.க. ஐடி விங் தனது பதிவில் விமர்சித்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ