‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணி’ என பெயர் திருத்தம் ஏன்?- வி.சி.க பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் விளக்கம்
சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச.) ‘சமூகநீதி வெற்றிக்கூட்டணி’ என முன்மொழியப்பட்ட கூட்டணியின் பெயர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் அறிவார்ந்த ஆளுமையால் ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணி’ என திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக,அக்கட்சிய
Sindhanai


சென்னை, 10 செப்டம்பர் (ஹி.ச.)

‘சமூகநீதி வெற்றிக்கூட்டணி’ என முன்மொழியப்பட்ட கூட்டணியின் பெயர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் அறிவார்ந்த ஆளுமையால் ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணி’ என திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக,அக்கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மதச்சார்பற்ற தமிழ்தேசியம்... சமூக நீதிக்கான தமிழ்தேசியம்” என தமிழ்தேசிய எழுச்சி மாநாட்டுப் பிரகடனத்தில் தலைவர் பதிவு செய்ததை நினைவு கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், மதச்சார்பின்மைக்கு எதிரான மதவாத, சாதியவாத சக்திகளே தமிழ்ச் சமூகத்தின் முதன்மை எதிரிகள் என்பதை தனது தலைவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் சிந்தனை செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

“விடுதலைச் சிறுத்தைகளின் உத்தி மாறலாம். இலக்கு ஒருபோதும் மாறுவதில்லை” என்றும் தனது எக்ஸ் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P