கல்லிடைக்குறிச்சியில் திருமண மண்டப உரிமையாளர் படுகொலை - போலீஸ் தீவிர விசாரணை
நெல்லை, 10 செப்டம்பர் (ஹி.ச) நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி அகத்தியர் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 52). அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு இவருக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இந்நில
கல்லிடைக்குறிச்சியில் திருமண மண்டப உரிமையாளர் படுகொலை -  போலீஸ் தீவிர விசாரணை


நெல்லை, 10 செப்டம்பர் (ஹி.ச)

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி அகத்தியர் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 52). அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு இவருக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது.

இந்நிலையில், கண்ணன் நேற்று (செப்டம்பர் 9) இரவு கல்லிடைக்குறிச்சி குத்துக்கல் தெருவில் தனது மகளை டியூஷன் கொண்டு போய் விட்டுவிட்டு, மீண்டும் அழைத்து வர சென்ற நிலையில், அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கண்ணனை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்ணனின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, சம்பவம் நடந்த இடத்தில் அம்பாசமுத்திரம் காவல்துறை கண்காணிப்பாளர் கணேஷ் குமார் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

அவரிடம் விசாரணை நடத்தினால் மட்டுமே கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b