இந்தியாவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் ஆசியக் கோப்பையை வெல்ல கனவு காண முடியும் -வங்காளதேச வீராங்கனை ஷர்மின் அக்தர்
துபாய் , 10 செப்டம்பர் (ஹி.ச.) மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், இந்திய அணியை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் ஆசியக் கோப்பையை வெல்வது குறித்து கனவு காண முடியும
A


துபாய் , 10 செப்டம்பர் (ஹி.ச.)

மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில், இந்திய அணியை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் ஆசியக் கோப்பையை வெல்வது குறித்து கனவு காண முடியும் என்று வங்காளதேச வீராங்கனை ஷர்மின் அக்தர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

இந்தியா போன்ற வலுவான அணியை எதிர்கொள்ளும்போது அழுத்தத்துக்கு இடம் கொடுக்காமல், நமது திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இந்திய அணியின் பலம் பேட்டிங். எங்களது பலம் பந்துவீச்சு.

பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணியை வீழ்த்த முடியும்.

இந்தியாவை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் ஆசியக் கோப்பையை வெல்வது பற்றிய கனவையும் காண முடியும் என்றார்.

வங்காளதேச அணி, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA