Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 11 செப்டம்பர் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் , பச்சமடத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் எனும் தனியார் தொழிலாளியின் மகன் ரோகித் 7, டி.ஏ.கே.எம் ராமம்மாள் பள்ளி 2ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இவர் வழக்கம் போல் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த போது, பின்னால் வேகமாக வந்த தனியார் பள்ளி பேருந்து எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியுள்ளது.
இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சிறுவனின் உறவினர்கள் சம்பவ இடத்தில் திரண்டனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பள்ளி பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி செல்லும் சிறு குழந்தை பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b