மகாராஷ்டிராவில் லாரி - வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பலி
பண்டாரா, 11 செப்டம்பர் (ஹி.ச.) மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் இன்று அதிகாலை லாரியும் பிக்அப் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். நாக்பூர் - ராய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பிம்பல்கான்
பண்டாரா


பண்டாரா, 11 செப்டம்பர் (ஹி.ச.)

மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் இன்று அதிகாலை லாரியும் பிக்அப் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

நாக்பூர் - ராய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பிம்பல்கான் சாலையில் உள்ள பவு தாபா அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மோதலின் வேகம் தீவிரமாக இருந்ததால் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சாகோலி துணை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் மக்களும் காவல் துறையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்து குறித்து பண்டாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நூருல் ஹசன் கூறுகையில், நாக்பூர்-ராய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பிம்பல்கான் சாலை அருகே பிக்அப் வேன் மீது லாரி மோதியதில் 3 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 3 பேர் சாகோலி துணை மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்தினார்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. விபத்து விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Hindusthan Samachar / vidya.b