உள்ளாட்சி தேர்தலை குறிவைத்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஷர்மிளா அதிரடி
அமராவதி , 11 செப்டம்பர் (ஹி.ச.) ஆந்திரபிரதேசத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. தேர்தலில் அதிகபட்ச இடங்களை கைப்பற்றும் நோக்கில் மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா, கட்சி நிர்வாகிகளுக்கு
A


அமராவதி , 11 செப்டம்பர் (ஹி.ச.)

ஆந்திரபிரதேசத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது.

தேர்தலில் அதிகபட்ச இடங்களை கைப்பற்றும் நோக்கில் மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா, கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

இது குறித்து தனது அறிக்கையில் அவர் கூறியதாவது :

இதற்காக 8 மூத்த தலைவர்கள் கொண்ட மாநில அளவிலான கண்காணிப்பு குழுவை அவர் அமைத்துள்ளார். இந்த குழுவின் தலைவராக காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும், முன்னாள் மந்திரியுமான ரகுவீரா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

குழுவின் ஒருங்கிணைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரியும், ஆந்திரபிரதேச காங்கிரஸ் செயல் தலைவருமான ஜே.டி. சீலம் செயல்படுவார்.

காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் கிடுகு ருத்ரராஜு, முன்னாள் மத்திய மந்திரிகள் பல்லம் ராஜு, கில்லி கிருபாராணி, ஆந்திரபிரதேச காங்கிரஸ் செயல் தலைவர் ஷேக் மஸ்தான் வலி, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான துளசிரெட்டி ஆகியோர் குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

மேலும், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான சமூக வலைதள பணிகள் மற்றும் தேர்தல் ஒருங்கிணைப்பு பொறுப்புகள் நெல்லூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிரண் குமார் ரெட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள்

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிகபட்ச இடங்களை கைப்பற்றும் வகையில் விரிவான திட்டங்களை வகுக்க வேண்டும் என்று கண்காணிப்பு குழுவினருக்கு ஷர்மிளா அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்தல், வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை தேர்வு செய்தல், பிரசார வியூகங்களை வகுத்தல், களத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பணிகளை கண்காணிப்பு குழு மேற்கொள்ளும்.

மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மாநகர காங்கிரஸ் தலைவர்கள், கண்காணிப்பு குழுவினருடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஷர்மிளா உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் ஆந்திரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க அவர் வியூகம் வகுத்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA