பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் - சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் எடப்பாடி பழனிசாமி
சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.) பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாளையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். இதுகு
Anna


சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.)

பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாளையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

இதுகுறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

வரும் 15.9.2026 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில், சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு, எடப்பாடி கே. பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

மேலும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை, வழக்கறிஞர் பிரிவு, விவசாயப் பிரிவு, விவசாயத் தொழிலாளர் அணி, மீனவர் பிரிவு, மருத்துவ அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்களும் திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று அவருக்கு மரியாதை செலுத்த உள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN