ஆச்சரியக்குறி கூட்டத்துக்கு தாராபுரம், மதுராந்தகம் மக்கள் அதிர்ச்சியை அளிக்கப் போவது உறுதி - அ.தி.மு.க ஐ.டி. விங்
சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.) தாராபுரம் தொகுதியின் கழக வெற்றி வேட்பாளரை அறிவித்த உடனே தவெக-விற்கு பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்துவிட்டது என்று அதிமுக ஐ.டி. விங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில் அதிமுக வேட்பாளர் பானுமதி அவர்கள் தவெக-வில்
It wing


சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.)

தாராபுரம் தொகுதியின் கழக வெற்றி வேட்பாளரை அறிவித்த உடனே தவெக-விற்கு பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்துவிட்டது என்று அதிமுக ஐ.டி. விங் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

அதில்

அதிமுக வேட்பாளர் பானுமதி அவர்கள் தவெக-வில் இணைந்ததாக முழுக்க முழுக்க ஒரு பொய் செய்தியை பரப்பி வருகின்றனர் ஆளுங்கட்சி “Fake News Warriors”.

நேரடியாக எதிர்கொள்ள துணிவில்லாமல், அடுத்த கட்சி MLA-க்களை குதிரை பேரம் செய்து வாங்குவது, அதே நபர்களை தங்கள் கட்சி வேட்பாளர்களாக நிறுத்துவது என தமிழக அரசியல் பார்க்காத அசிங்கங்களை கூச்சமின்றி செய்யும் த.வெ.க., இப்போது நமது வேட்பாளர் வெற்றி பெறப் போவது தெரிந்து பொய்களை கட்டவிழ்த்து விட ஆரம்பித்து விட்டது.

பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த ஒரு கட்சியிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

அதிமுக வேட்பாளர் பற்றி Fake News பரப்பி வருவோர் மீது கடுமையான சட்ட ரீதியான முன்னெடுப்புகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறோம்.

மக்கள் அளித்த தீர்ப்பை வளைக்க நினைக்கும் இந்த ஆச்சரியக்குறி கூட்டத்துக்கு தாராபுரம் மற்றும் மதுராந்தகம் மக்கள் அதிர்ச்சியை அளிக்கப் போவது உறுதி என்று பதிவிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN