Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 11 செப்டம்பர் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69 ஆவது நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து தமிழக அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல் குமார், பிரபு, ராஜீவ், அருண் ராஜ், மதன் ராஜா உள்ளிட்ட அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து மின்சார துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியின் போது,
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தியாகி இமானுவேல் சேகரன் தியாகத்தை போற்றும் வகையில் இன்று அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி இருக்கிறோம் என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள், முதலமைச்சர் வெளிநாட்டிலிருந்து வந்த பிறகு அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்று கேட்டதற்கு,
இங்கு அஞ்சலி செலுத்த வந்திருக்கிறோம். அதனால் அரசியல் பேச விரும்பவில்லை என்று கூறினார்
Hindusthan Samachar / ANANDHAN