Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச)
தமிழ்நாட்டின்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் விஜய் நேற்று இரவு லண்டன் புறப்பட்டார்.
நேற்றிரவு சென்னை விமான நிலயத்தில் இருந்து புறப்பட்ட விஜய் துபாய் சென்று அங்கிருந்து லண்டன் புறப்பட்டார்.
இந்த நிலையில், இன்று முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றடைந்தார். அங்கு முதலமைச்சர் விஜய்க்கு இங்கிலாந்து வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் அவரது இந்த லண்டன் பயணம் அமைந்துள்ளது.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதலமைச்சர் விஜய் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
இந்த பயணத்தின் போது லண்டனில் நடைபெறவுள்ள தொழிலதிபர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் முக்கிய கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
தமிழ்நாட்டில் நிலவும் தொழில் செய்வதற்கு உகந்த சூழல், அரசின் புதிய கொள்கைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து அவர் விரிவாக எடுத்துரைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் விஜய் தலைமையிலான குழு வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி நாடு திரும்பும்.
அவரது குழுவில், விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலர் மேகநாத ரெட்டி, தொழில் துறை வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தீபக் ஜேக்கப் மற்றும் அரசு அலுவலர்கள் இடம்பெற்றிருக்கின்றனர்.
இந்த அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக, பிரிட்டனில் அஜித்குமார் பங்கேற்கும் 'Michelin Le Mans Cup' கார் பந்தயத்தை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
Hindusthan Samachar / vidya.b