7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் - பிரதமர் மோடியுடன் நாளை சந்திப்பு
புதுடெல்லி, 11 செப்டம்பர் (ஹி.ச.) பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை தலைநகர் புதுடெல்லிக்கு வருகை தர உள்ளார். நாளை பகல் 12 மணியளவில் டெல்லி விமான நிலையத்தில் அவரது சிறப்பு விமானம் தரையிறங்கும் என்று வெளியுறவுத்துறை
7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் - பிரதமர் மோடியுடன் நாளை சந்திப்பு


புதுடெல்லி, 11 செப்டம்பர் (ஹி.ச.)

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை தலைநகர் புதுடெல்லிக்கு வருகை தர உள்ளார். நாளை பகல் 12 மணியளவில் டெல்லி விமான நிலையத்தில் அவரது சிறப்பு விமானம் தரையிறங்கும் என்று வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சீன அதிபர் இந்தியா வருவது சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பயணத்தின் போது சீன வெளியுறவு அமைச்சர் உட்பட 70 பேர் கொண்ட உயர்மட்ட தூதுக்குழு அவருடன் வருகை தருகிறது. டெல்லியில் சீன அதிபருக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த வருகையின் முக்கிய நிகழ்வாக, நாளை பிரதமர் நரேந்திர மோடியை சீன அதிபர் ஜி ஜின்பிங் நேரில் சந்தித்து பேச உள்ளார்.

இந்த இருதரப்பு சந்திப்பில் இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை, வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல், பிராந்திய பாதுகாப்பு மற்றும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் எதிர்காலம் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b