Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.)
கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ஒடிசாவைச் சேர்ந்த ARSS குழுமத்தின் முன்னாள் புரமோட்டர் மற்றும் இயக்குநர்கள், அவர்களது குடும்பத்தினருடன் தொடர்புடைய இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அனில் அகர்வால், ராஜேஷ் அகர்வால், சுனில் அகர்வால், சுபாஷ் அகர்வால் உள்ளிட்டோருடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், AMR/AMRL குழுமத்தின் புரமோட்டர் மகேஷ் குமார் ரெட்டி அல்துரு என்பவருடன் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
SREI Infrastructure Finance Ltd. (SIFL), SREI Equipment Finance Ltd. (SEFL) ஆகிய நிறுவனங்களில் பெறப்பட்டதாகக் கூறப்படும் முறைகேடான கடன்கள் தொடர்பான புகார்களின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடன் தொகைகளை முறையாக திருப்பிச் செலுத்தாதது, கடன்களை தொடர்ந்து புதுப்பித்து கணக்குகளில் முறைகேடாக காட்டுதல், நிதி முறைகேடுகள், கடன் தொகைகளை வேறு நிறுவனங்களுக்கு மாற்றுதல் மற்றும் Round-tripping எனப்படும் பணத்தை சுற்றி சுழற்றி பரிவர்த்தனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
சோதனை நடைபெறும் இடங்களில் முக்கிய ஆவணங்கள், நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான பதிவுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து இதுவரை அமலாக்கத்துறை தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
Hindusthan Samachar / P YUVARAJ