இமானுவேல் சேகரன் நினைவு நாளில் சி.பி. ராதாகிருஷ்ணன் மரியாதை
புதுடெல்லி, 11 செப்டம்பர் (ஹி.ச.) தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாளையொட்டி, அவரது தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் மரியாதையுடன் நினைவுகூர்ந்து மலரஞ்சலி செலுத்தி வணங்கியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக
இமானுவேல் சேகரனுக்கு மரியாதை


புதுடெல்லி, 11 செப்டம்பர் (ஹி.ச.)

தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாளையொட்டி, அவரது தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் மரியாதையுடன் நினைவுகூர்ந்து மலரஞ்சலி செலுத்தி வணங்கியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

விடுதலைப் போராட்டத்தில் இளம் வயதிலேயே பங்கேற்ற இமானுவேல் சேகரன், விடுதலைக்குப் பின்னரும் சமத்துவத்தையும் சமூக நீதியையும் நிலைநாட்ட தொடர்ந்து பாடுபட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

சமூகப் பாகுபாடுகளுக்கு எதிராக துணிச்சலுடன் குரல் எழுப்பிய அவர், மக்களின் உரிமைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டதாகவும் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சமத்துவம், சமூக நீதி மற்றும் நல்லிணக்கம் நிறைந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற இமானுவேல் சேகரனின் இலட்சியங்கள் என்றும் நினைவுகூரத்தக்கவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தியாகி இமானுவேல் சேகரனின் வாழ்க்கையும் தியாகமும் சமூகத்தில் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்த தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கட்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam