Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 11 செப்டம்பர் (ஹி.ச.)
இந்தியாவின் கல்வி அமைப்பு, எதிர்கால தலைமுறையை முன்னேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த தலைமுறையையே கைவிடுவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தேர்வுத் தாள் கசிவு, அதிகரித்து வரும் கல்விக் கட்டணங்கள் மற்றும் சீர்குலைந்த உள்கட்டமைப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் இந்திய கல்வி அமைப்பை பாதித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
லட்சக்கணக்கான இளைஞர்கள் நேர்மையாக உழைத்தாலும், கல்வி அமைப்பு அவர்களை ஏமாற்றி வருவதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
கல்வி அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முதல் படியாக, அதன் பாதிப்புகளை தினந்தோறும் அனுபவித்து வருபவர்களின் கருத்துகளை கேட்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கல்வி அமைப்பின் மீது ஏன் நம்பிக்கையை இழந்துள்ளனர் என்பதை தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், தங்களது அனுபவங்கள், ஆதாரங்கள் மற்றும் மாற்றத்திற்கான கருத்துகளை குறிப்பிட்டுள்ள இணைப்பில் பகிருமாறும் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
அனைவரும் ஒன்றிணைந்து கல்வி அமைப்பின் மீது மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P