வந்தே மாதரம் பாடலில் 2 சரணங்கள் மட்டும் பாட வேண்டும்- கர்நாடக அரசு அதிரடி உத்தரவு
பெங்களூரு , 11 செப்டம்பர் (ஹி.ச.) கர்நாடகத்தில் அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் 2 சரணங்களை மட்டும் பாடினால் போதும் என்று காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலை முழுமையாக பா
A


பெங்களூரு , 11 செப்டம்பர் (ஹி.ச.)

கர்நாடகத்தில் அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் 2 சரணங்களை மட்டும் பாடினால் போதும் என்று காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலை முழுமையாக பாட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில், கர்நாடக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

காங்கிரஸ் எதிர்ப்பு

‘வந்தே மாதரம்’ பாடலை முழுமையாக பாட வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மேலும், காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் 2 சரணங்கள் மட்டுமே பாடப்படும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

சமீபத்தில் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ‘வந்தே மாதரம்’ பாடல் பாடப்பட்டது. அப்போது பாடல் முழுமையாக பாடப்படாமல் பாதியில் நிறுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கர்நாடக அரசு உத்தரவு

இந்த நிலையில், கர்நாடக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் 2 சரணங்களை மட்டும் பாடினால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கவர்னர் ஆகியோர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலை முழுமையாக பாடலாம் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மற்ற அரசு நிகழ்ச்சிகளில் முதல் 2 சரணங்களை மட்டும் பாட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப கர்நாடக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு பா.ஜனதா மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA