மதுரமங்கலம் சிப்காட் தொடர்பாக பரவும் தகவல் தவறானது - தமிழ்நாடு அரசு விளக்கம்
தமிழ்நாடு, 11 செப்டம்பர் (ஹி.ச.) பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பட்டியலில் உள்ள மதுரமங்கலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது என தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம
தமிழ்நாடு அரசு


தமிழ்நாடு, 11 செப்டம்பர் (ஹி.ச.)

பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பட்டியலில் உள்ள மதுரமங்கலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது என தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில்,

பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படவுள்ள பகுதிக்கும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சிப்காட் தொழிற்பேட்டை அமையவுள்ள பகுதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரமங்கலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான நிர்வாக அனுமதி அரசாணை 2024ஆம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டு, அதற்கான நில எடுப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், 2026-27ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு கூட்டத்தொடரில் மதுரமங்கலத்தில் செமிகண்டக்டர் மற்றும் மின்னணு உற்பத்திப் பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவித்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசிதழ் அறிவிப்பு, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் நில எடுப்புப் பணியின் ஒரு பகுதி மட்டுமே என்றும் தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam