Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 11 செப்டம்பர் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள தியாகி இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் இன்று அவரது 69 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், அமைச்சர் ராஜேஸ்வரன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மலைகளையும் வைத்து மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியின் போது,
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரனை பொருத்தவரை தான் இருக்கும் இடத்திற்கு விசுவாசமாக இருக்கிறார். அவர் மத துவேசத்தை பரப்பக்கூடிய ஆர்எஸ்எஸ் வழித்தோன்றலான பாஜகவில் இருப்பதால் தான் புதிய தலைமை செயலகத்தை கைவிடும் படி சொல்கிறார்.
புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டும் என அப்போதைய முதலமைச்சர்கள் கலைஞர், செல்வி ஜெயலலிதா ஆகியோரும் விரும்பினர். அதைத்தான் தற்போது முதலமைச்சர் விஜய் நிறைவேற்றி வருகிறார்.
முதலமைச்சர் விஜய் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தலைமைச் செயலகம் காட்டும் பணியை துவங்குவார் .
ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் ராகுல் தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய தரும் தமிழகத்தில் சம மதிப்பு பணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
இந்திய மீனவர்களுக்கு வாழ்வாதார பிரச்சனையான மீன்பிடி பிரச்சனையை தீர்க்க முடியாத வெளியுறவுத்துறை தலை குனிந்து நிற்கிறது மானங்கெட்ட மோடி அரசு மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க மறுக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் வெற்றி பெற்றவர்களை இப்போது உங்களது கூட்டணி வேட்பாளராக அறிவித்திருக்கிறது என்று கேட்டதற்கு,
இது போன்ற நடைமுறைகள் வழக்கமாக நடப்பது தான். இந்த கேள்வி கேட்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று கூறினார்
Hindusthan Samachar / ANANDHAN