இமானுவேல் சேகரனாரின் தியாகமும் பணிகளும் சமத்துவத்தை நோக்கிய முயற்சிகளுக்கு என்றும் துணைநிற்கும் – மு.க.ஸ்டாலின் புகழாரம்
சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.) சமத்துவப் போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளையொட்டி, அவரது தியாகத்தையும் சமூகப் பணிகளையும் போற்றும் வகையில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், தியாகி இமானுவேல
Mks


Gg


சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.)

சமத்துவப் போராளி தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளையொட்டி, அவரது தியாகத்தையும் சமூகப் பணிகளையும் போற்றும் வகையில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், தியாகி இமானுவேல் சேகரனாரின் நூற்றாண்டையொட்டி அவரது பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட ஆணை பிறப்பிக்கப்பட்டதுடன், பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 5 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் இமானுவேல் சேகரனாரின் நினைவைப் போற்றும் வகையில் பல்வேறு சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் விடுதலைக்காகவும், சமூகத்தில் நிலவிய சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும் இமானுவேல் சேகரனார் உறுதியான போராட்டங்களை முன்னெடுத்ததாகவும், அவரது பணிகளும் தியாகமும் சமத்துவத்தை நோக்கிய முயற்சிகளுக்கு என்றும் துணைநிற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இமானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க எனவும் மு.க.ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ