ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக போராடிய இமானுவேல் சேகரனார் – சீமான் புகழாரம்
சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.) இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தளத்தில் அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார். நாட்டின் எல்லையில் நின்று மண்ணையும், மக்களையும் பாதுகாத்த இராணுவ வீரராகவ
Nn


சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.)

இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தளத்தில் அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.

நாட்டின் எல்லையில் நின்று மண்ணையும், மக்களையும் பாதுகாத்த இராணுவ வீரராகவும், சாதிய இழிவையும், தீண்டாமைக் கொடுமைகளையும் ஒழிக்கப் போராடிய பெருந்தமிழராகவும் இமானுவேல் சேகரனார் விளங்கினார் என சீமான் குறிப்பிட்டுள்ளார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக இயக்கம் கண்ட பெருந்தகையாகவும், சாதிய தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக மாநாடுகள் நடத்திய புரட்சியாளராகவும் இமானுவேல் சேகரனார் திகழ்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இமானுவேல் சேகரனாரின் நினைவைப் போற்றும் இந்நாளில், வழிவழி வருகின்ற மானத்தமிழ்ப் பிள்ளைகள் நாம் தமிழர் என்ற ஓர்மையுடன் ஒன்றுபட்டு, சாதிய ஏற்றத்தாழ்வற்ற சமத்துவச் சமூகம் படைப்போம் என உறுதியேற்க வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சமூகநீதிப் போராளி இமானுவேல் சேகரனாருக்கு பெருமிதத்தோடு புகழ் வணக்கம் செலுத்துவோம் என்றும் சீமான் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ