Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 11 செப்டம்பர் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் நினைவிடத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார், ராஜலட்சுமி மணிகண்டன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியின்போது,
ஆளுகிற கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தியாகி இமானுவேல் சேகரனுக்கு மரியாதை செலுத்துவோம்.
தியாகி இமானுவேல் சேகரனின் புகழை அதிமுக எக்காலத்திலும் கொண்டு போய் இளைஞர்களிடம் சேர்த்து உள்ளது.
தமிழ்நாட்டில் விவசாயிகள் கோரிக்கை, பயிர்க்கடன் கோரிக்கை நிலுவையில் உள்ளது. ஆனால் முதல்வர் லண்டன் சென்றுள்ளார்.
100 நாட்கள் ஆட்சி நடத்தவே கோடியில் கடன் வாங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
சட்டப்பேரவையில் கஜானா காலி என சொல்லிவிட்டு முதல்வர் விஜய்யின் பட்டினப்பாக்கம் இல்லம் அருகே 1200 கோடி ரூபாயில் புதிய தலைமை செயலகம் என ஆச்சரியப்படுத்தி உள்ளார் விஜய்.
இதையெல்லாம் எப்படி செய்தார். வல்லுநர் குழு ஆலோசனை படி தான் செய்கிறாரா?
ஏற்கனவே சென்னையில் நடைபெற்ற மூதலீட்டாளர் மாநாட்டில் ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை. அது ஒரு மர்மமான முதலீட்டாளர் மாநாடாக நடைபெற்றது.
இப்போது முதல்வர் லண்டன் சென்றது குறித்து அறிக்கை வந்தால் தான் தெரியும் என்று கூறினார்.
Hindusthan Samachar / ANANDHAN