Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 11 செப்டம்பர் (ஹி.ச.)
பிரிக்ஸ் உச்சி மாநாட்டை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள புகழ்பெற்ற அம்ருத் உத்யன் தோட்டம் உள்ளிட்ட பகுதிகள் மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டு நிகழ்வுகள் மற்றும் அதையொட்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத் தோட்டம் மற்றும் அம்ருத் உத்யன் பார்வையிடும் பகுதிகளுக்கு இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக அம்ருத் உத்யன் தோட்டத்தைப் பார்வையிட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நிலையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த தற்காலிக தடையால் பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். முன்பதிவு செய்தவர்களுக்கான அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு ஏற்பாடுகள் முடிந்த பின்னர், மூன்று நாட்களுக்குப் பிறகு தோட்டம் மீண்டும் வழக்கம்போல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் என்றும், இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் மாளிகை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b