பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புதின் டெல்லி வருகை - இன்று பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு
புதுடெல்லி, 11 செப்டம்பர் (ஹி.ச.) நாளை தலைநகர் புதுடெல்லியில் தொடங்கவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று டெல்லி வந்தடைந்தார். வெளிநாட்டு தலைவர்கள் தொடர்ந்து வருகை தந்த வண்ணம் உள்ளதால், தலைநகர் டெல்லி மு
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புதின் டெல்லி வருகை - இன்று பிரதமர் மோடியுடன் முக்கிய சந்திப்பு


புதுடெல்லி, 11 செப்டம்பர் (ஹி.ச.)

நாளை தலைநகர் புதுடெல்லியில் தொடங்கவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று டெல்லி வந்தடைந்தார்.

வெளிநாட்டு தலைவர்கள் தொடர்ந்து வருகை தந்த வண்ணம் உள்ளதால், தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையம் முதல் தலைவர்கள் தங்கும் நட்சத்திர விடுதிகள் வரை பல அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையினருடன் இணைந்து சிறப்பு பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் டெல்லி வந்தடைந்த ரஷ்ய அதிபர் புதின், இன்று பிற்பகல் 3 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பு இரு நாடுகளின் உறவில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

இரு தலைவர்களுக்கு இடையிலான இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில், இந்தியா - ரஷ்யா இடையேயான வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக தற்போதைய உலகளாவிய சூழலில் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை தொடங்கும் பிரிக்ஸ் மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று உலக பொருளாதாரம், வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க உள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b