Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 11 செப்டம்பர் (ஹி.ச.)
கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், துடியூர் வி.ஜி. மருத்துவமனை எதிரே உள்ள மைதானத்தில் கார் வியாபாரிகள் நண்பர்கள் கூட்டமைப்பு சார்பில் இந்த கார் மேளா தொடங்கியுள்ளது.
செப்டம்பர் 14-ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் இந்த விற்பனைத் திருவிழா, கோவை மாவட்ட கார் வியாபாரிகள் சங்கத்தின் ஒப்புதலுடன் நடத்தப்படுகிறது.
30 முதல் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் வாய்ந்த முன்னணி கார் விற்பனை நிறுவனங்கள் ஒன்றிணைந்து நடத்தும் இந்த மேளாவில், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 கோடி வரையிலான பயன்படுத்திய கார்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சிறிய பட்ஜெட் கார்களில் தொடங்கி சொகுசு கார்கள் வரை பல்வேறு நிறுவனங்களின் கார்கள் ஒரே இடத்தில் பார்வைக்கும், விற்பனைக்கும் இடம்பெற்றுள்ளன.
மேலும், வாடிக்கையாளர்களின் வசதிக்காக உடனடி வங்கிக் கடன், வாகனக் காப்பீடு, பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்வதற்கான வசதி உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் கண்காட்சி வளாகத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள வாகனங்களின் ஆவணங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு, நம்பகமான முறையில் கார்கள் விற்பனை செய்யப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களது கனவு காரை வாங்க விரும்புவோர், செப்டம்பர் 14-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மெகா கார் மேளாவை பயன்படுத்திக் கொள்ளலாம் என கார் வியாபாரிகள் நண்பர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சியில் ஸ்ரீ வைஷ்ணவி கார்ஸ் உரிமையாளர் ராஜசேகர், அசைன் கார்ஸ் உரிமையாளர் அசைன் அலி, கே.பி.கே. மோட்டார்ஸ் கார்த்திக், ஐ.ஏ.ஜி. கார்ஸ் ராஜா, ரோட் மாஸ்டர் மணிகண்டன், ஆர்.ஆர். கார்ஸ் ராதாகிருஷ்ணன், விஜய் கார்ஸ் கோபி, ஜே.கே.கே. கார்ஸ் ஜெயராமன், சதீஷ்குமார், எஸ்.கே. கார் ஷாப் உரிமையாளர் சஞ்சீவ்குமார் உள்ளிட்ட கார் வியாபாரிகள் நண்பர்கள் கூட்டமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P