தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு- எடப்பாடி பழனிசாமி இரங்கல்
சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.) தமிழறிஞரும், பேராசிரியரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழின் இனிமையையும், பட்டிமன
Eps solomon


சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழறிஞரும், பேராசிரியரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தமிழின் இனிமையையும், பட்டிமன்றத்தின் சிறப்பையும் தனது தனித்துவமான பேச்சாற்றலால் உலகெங்கும் கொண்டு சேர்த்த சாலமன் பாப்பையா மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை கலந்த தனது பேச்சால் மக்களை சிரிக்க வைத்ததுடன், தமிழ் மொழியின் பெருமையையும், தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்பையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் சாலமன் பாப்பையா என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கும், பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சாலமன் பாப்பையாவை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, மறைந்த சாலமன் பாப்பையாவின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை வேண்டுவதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / GOKILA arumugam