பிரபல பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா காலமானார்!
மதுரை, 11 செப்டம்பர் (ஹி.ச.) தமிழறிஞர் சாலமன் பாப்பையா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90. இவரின் இழப்பு பலருக்கும் பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரை சாத்தான்குடியை சேர்ந்த சாலமன் பாப்பையா, வயது மூப்பு காரணமாக
சாலமன் பாப்பையா


மதுரை, 11 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழறிஞர் சாலமன் பாப்பையா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90. இவரின் இழப்பு பலருக்கும் பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை சாத்தான்குடியை சேர்ந்த சாலமன் பாப்பையா, வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மதுரை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

2000-ல் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றிருந்தார்.

தமிழறிஞர் சாலமன் பாப்பையா அரசரடி பகுதியிலுள்ள ஞானஒளிபுரத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது மனைவி ஜெயபாய் (86). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். வயது முதிர்வு காரணமாக கடந்த ஆண்டு இவரது மனைவி காலமானார்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றார். 2021ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருந்தார்.

பல பட்டிமன்றங்களில் பேசி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருந்தார்.

தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P