சரம், சரமாக சிக்கிய கஞ்சா சாக்லேட்டுகள் - போலீசார் தீவிர விசாரணை
தென்காசி, 11 செப்டம்பர் (ஹி.ச.) தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள காலங்கரை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்களை மறித்து சோதனை செய்துள்ளனர். அப்போது, அவர்களிடம் அதி
Arrest


தென்காசி, 11 செப்டம்பர் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள காலங்கரை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்களை மறித்து சோதனை செய்துள்ளனர்.

அப்போது, அவர்களிடம் அதிக அளவிலான சாக்லேட்டுகள் இருந்த நிலையில், அந்த சாக்லேட் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த சாக்லேட்டில் கஞ்சா கலந்திருப்பது தெரிய வந்த நிலையில், அவர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர்கள் செங்கோட்டை பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (வயது 30) மற்றும் பாஸ்கரன் (வயது 46) என்பதும், அவர்கள் கஞ்சா சாக்லேட்டை விற்பனை செய்வதற்காக எடுத்துச் செல்வதும் தெரிய வந்த நிலையில், அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 254 கிராம் எடை கொண்ட கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் அது தொடர்பாக தொடர் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN