Enter your Email Address to subscribe to our newsletters

டோச்சிகி , 11 செப்டம்பர் (ஹி.ச.)
இந்தியா–ஜப்பான் அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததாக ஜப்பான் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
உலக சாம்பியனும், ஐ.சி.சி. டி20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அணியுமான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி, ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த பயணத்தில் ஜப்பான் அணிக்கு எதிராக ஒரே ஒரு டி20 போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது.
இந்தியா–ஜப்பான் அணிகள் மோதும் இந்த போட்டி வருகிற 22-ந்தேதி ஜப்பானின் டோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியை காண ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக ஜப்பான் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியா–ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான 75 ஆண்டுகால நட்புறவை கொண்டாடும் வகையில் இந்த டி20 போட்டி நடத்தப்படுகிறது.
உலக சாம்பியனான இந்திய அணி ஜப்பானில் விளையாட இருப்பது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA