Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.)
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதித்தமிழர் கட்சி முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆதித்தமிழர் கட்சித் தலைவர் கு.ஜக்கையன்,
பொதுச்செயலாளர் விஸ்வைகுமார், அமைப்புச் செயலாளர் திலீபன், மாநில ஆலோசகர் விடுதலைகுமார் ஆகியோர் இன்று (செப்.11) காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தனர்.
அப்போது, நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதித்தமிழர் கட்சி முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.
மேலும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களின் வெற்றிக்காக ஆதித்தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழுமையாக தேர்தல் பணியாற்றுவார்கள் என்றும் உறுதியளித்தனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P