காலத்தால் அழியாத பாரதியின் கவிதைகளை நெஞ்சில் ஏந்துவோம் - கமல்ஹாசன் புகழஞ்சலி
சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.) காலத்தின் ஓட்டத்திலும் தன் சோபை இழக்காத மகாகவி பாரதியாரின் கவிதைகளை, அவரது நினைவு நாளில் நாம் அனைவரும் மனதில் இருத்திக் கொள்வோம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். மகாகவி பாரதியாரின
காலத்தால் அழியாத பாரதியின் கவிதைகளை நெஞ்சில் ஏந்துவோம் - கமல்ஹாசன் புகழஞ்சலி


சென்னை, 11 செப்டம்பர் (ஹி.ச.)

காலத்தின் ஓட்டத்திலும் தன் சோபை இழக்காத மகாகவி பாரதியாரின் கவிதைகளை, அவரது நினைவு நாளில் நாம் அனைவரும் மனதில் இருத்திக் கொள்வோம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு தனது சமூக ஊடகப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ் இலக்கிய உலகில் பாரதியாரின் இடம் என்றும் நிலைத்து நிற்கும் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார். பாரதியாரின் கவிதைகள் வெறும் கவிதைகள் அல்ல, அவை காலத்தைக் கடந்து நிற்கும் வாழ்வியல் தத்துவங்கள் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், இன்று நாம் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தும் 'தமிழ்நாடு' என்ற சொல்லையும், 'புரட்சி' என்ற கருத்தாக்கத்தையும் தமிழர்களுக்கு ஒரு அரசியல் மற்றும் சமூக சிந்தனையாக அறிமுகம் செய்த முன்னோடி பாரதியார் தான் என்று கமல்ஹாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் என்பது வெறும் மொழி மட்டுமல்ல, அது ஒரு தேசிய அடையாளம் என்ற பெருமிதத்தை தமிழர்கள் மனதில் விதைத்தவர் பாரதி என்றும், அவரது சிந்தனைகள் இன்றைய தலைமுறைக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b