பெண் வழக்கறிஞர் மீது ஆண் காவலர்கள் தாக்குதல்? - விஜய் அரசின் ‘வெற்றி காவல்’ திட்டம் இதுதானா? – அதிமுக எம்.பி. இன்பதுரை கேள்வி
சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் பெண் வழக்கறிஞர் ஜெயந்தி மற்றும் மற்றொரு பெண் மீது ஆண் காவலர்கள் தாக்குதல் நடத்தியதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசை விமர்சித்து அதிமுக நா
Inbadurai


Nb


சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் பெண் வழக்கறிஞர் ஜெயந்தி மற்றும் மற்றொரு பெண் மீது ஆண் காவலர்கள் தாக்குதல் நடத்தியதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசை விமர்சித்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பதிவில்,

வழக்கு என்ன, எதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்த விவாதங்கள் ஒருபுறம் இருக்கட்டும் எனக் குறிப்பிட்டுள்ள இன்பதுரை, பெண்களை, அதுவும் ஒரு வழக்கறிஞரை, ஆண் காவலர்களை கொண்டு தாக்குவதுதான் விஜய் அரசின் வெற்றி காவல் திட்டமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், மனித உரிமை சட்டங்களும், உச்சநீதிமன்றத்தின் டி.கே.பாசு தீர்ப்பில் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளும் விஜய் அரசை கட்டுப்படுத்தாதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசும் விஜய் அரசின் நடவடிக்கைகளுக்கு மத்தியில், காவல் நிலையத்திலேயே பெண்கள் மீது ஆண் காவலர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் இன்பதுரை வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் விஜயின் ஆதரவாளர்கள் மற்றும் அரசை ஆதரிப்பவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்றும் தனது பதிவில் இன்பதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ