புதுடெல்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம் - 11 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு
புதுடெல்லி, 12 செப்டம்பர் (ஹி.ச.) புதுடெல்லியில் பிரிக்ஸ் நாடுகளின் இரண்டு நாள் உச்சி மாநாடு இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 11 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். மீள்திறன், புத்தாக்கம்,
புதுடெல்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம் - 11 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு


புதுடெல்லி, 12 செப்டம்பர் (ஹி.ச.)

புதுடெல்லியில் பிரிக்ஸ் நாடுகளின் இரண்டு நாள் உச்சி மாநாடு இன்று கோலாகலமாக தொடங்குகிறது.

இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 11 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மையை கட்டமைத்தல் என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு மாநாடு நடைபெறுகிறது.

இதில் வர்த்தகம், முதலீடு, நிதி வசதிகள், தொழில்நுட்பம், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய துறைகளில் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு பிரிக்ஸ் மாநாடு அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது.

தொடக்க நிகழ்வுக்கு முன்பாக உறுப்பு நாடுகளின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை விளக்கும் சிறப்பு கண்காட்சியை தலைவர்கள் பார்வையிட உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பாரத் மண்டபத்தின் புல்வெளியில் அனைத்து நாடுகளின் தலைவர்களும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள்.

பின்னர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அடையாளமாக மரக்கன்றுகளை நடும் நிகழ்வும் நடைபெறும்.

பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் ஒரே இடத்தில் கூடுவதால் தலைநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பணியில் சுமார் 4800 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் 35 முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டையொட்டி இன்று இரவு 7.30 மணிக்கு பிரதமர், வருகை தந்துள்ள உலகத் தலைவர்களுக்கு சிறப்பு விருந்தளிக்கிறார்.

Hindusthan Samachar / vidya.b