Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர்
6-ந் தேதி நடைபெற உள்ளது. தற்போது வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. வேட்புமனு தாக்கலுக்கு 16-ந்தேதி கடைசி நாளாகும்
இந்த நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாட்டு பணிகளை மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வின் போது, அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இயந்திரங்களின் செயல்பாடு குறித்து விரிவான சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமும் சரியாக இயங்குகிறதா, வாக்குகளை துல்லியமாக பதிவு செய்கிறதா மற்றும் VVPAT இயந்திரங்களுடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து முதற்கட்ட சரிபார்ப்பு (First Level Checking) செய்யப்பட்டது. வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துகளும் கேட்கப்பட்டன.
Hindusthan Samachar / vidya.b