நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயம் - முதலமைச்சர் விஜய் இன்று மாலை தொடங்கி வைக்கிறார்
சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச) லண்டனில் பிரசித்தி பெற்ற சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டில் பிரபல நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் இன்று மாலை தொடங்கி வைக்கிறார். திரைத்துறையில் முன்னணி நடிகராக இருக்கும் அதே வேளையில
Car race featuring actor Ajith Kumar – Chief Minister Vijay to inaugurate it this evening.


சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச)

லண்டனில் பிரசித்தி பெற்ற சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டில் பிரபல நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.

திரைத்துறையில் முன்னணி நடிகராக இருக்கும் அதே வேளையில், தொழில்முறை கார் பந்தய வீரராகவும் சர்வதேச அளவில் கவனம் பெற்று வருபவர் அஜித்குமார்.

இந்நிலையில் லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டில் அவர் பங்கேற்கும் சிறப்பு கார் பந்தயம் இன்று நடைபெற உள்ளது.

இந்த பந்தயத்தை மாலையில் முதலமைச்சர் விஜய் முறைப்படி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் லண்டன் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பந்தயத்தை தொடங்கி வைத்த பின்னர், சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டிலேயே அமர்ந்து போட்டியை நேரில் கண்டு களிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி நடிகர் ஒருவர் சர்வதேச பந்தயத்தில் பங்கேற்பதும், அதனை தமிழக முதலமைச்சரே நேரில் சென்று தொடங்கி வைப்பதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b