Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)
வடசென்னை ஆர்.கே. நகர் பகுதியில் நள்ளிரவில் இளைஞர்கள் இருவர் கையில் பட்டாக்கத்தியுடன் தெருக்களில் சுற்றித்திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளை மற்றும் சிவப்பு நிற சட்டை அணிந்திருந்த இருவரும் கத்தியை கையில் வைத்தபடி தெருக்களில் கத்திக் கூச்சலிட்டவாறு சென்றதாக கூறப்படுகிறது. மேலும், அங்கிருந்த வாகனங்களை கத்தியால் தாக்கி சேதப்படுத்த முயன்றதாகவும் தெரிகிறது.
இளைஞர்களின் அதிர்ச்சியளிக்கும் நடவடிக்கையை அப்பகுதி மக்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இதேபோல், இரண்டு நாட்களுக்கு முன்பு திருவொற்றியூரில் பட்டப்பகலில் இருவர் பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஆர்.கே. நகரிலும் ஆயுதங்களுடன் இளைஞர்கள் சுற்றித்திரிந்த காட்சி வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam