முதல்வர் விஜய் பேச்சிற்கு கண்டனம் - திருச்சியில் தி.மு.கவினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி, 12 செப்டம்பர் (ஹி.ச.) தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசிய பேச்சுக்கள் மற்றும் சைகைகளுக்குக் கண்டனம் தெரிவித்து, திமுக தலைமை அறிவித்தபடி, இன்று தமிழகத்தின் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
முதல்வர் விஜய் பேச்சிற்கு கண்டனம் - திருச்சியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்


திருச்சி, 12 செப்டம்பர் (ஹி.ச.)

தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பேசிய பேச்சுக்கள் மற்றும் சைகைகளுக்குக் கண்டனம் தெரிவித்து, திமுக தலைமை அறிவித்தபடி, இன்று தமிழகத்தின் அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்ட திமுக சார்பில் மரக்கடை பகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை கண்டித்து திமுகவினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் உள்ளிட்ட திருச்சி மாவட்ட முக்கிய திமுக நிர்வாகிகள் முன்னிலையில் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மத்திய, வடக்கு, தெற்கு, கிழக்கு ஆகிய மாவட்டங்களில் திமுக செயலாளர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, க.வைரமணி, .ந.தியாகராஜன் உள்ளிட்ட முக்கிய திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, வட்ட செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் திரளான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு விஜய்க்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

களத்தில் இறங்கி திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பது திருச்சி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b