முதியோர் உதவித்தொகையை வரும் 14 ஆம் தேதிக்குள் வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை - அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு, 12 செப்டம்பர் (ஹி.ச.) ஈரோட்டில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் இருக்கிற எல்லாப் பகுதிகளும் கல்வித்துறையின் மூலமாக நம்முடைய முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இருக்கின்றன
Minister Sengottaiyan


ஈரோடு, 12 செப்டம்பர் (ஹி.ச.)

ஈரோட்டில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

தமிழ்நாட்டில் இருக்கிற எல்லாப் பகுதிகளும் கல்வித்துறையின் மூலமாக நம்முடைய முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இருக்கின்றன. எல்லாத் திட்டங்களும் சிறப்பாக நிறைவேற்றப்படும்.

முதியோர் உதவித்தொகை 5 லட்சம் பேருக்கு வராதது குறித்து மத்திய அரசு ஒரு பெயரை மாற்றியிருக்கிறது.

மத்திய அரசு வழங்க வேண்டிய முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை மற்றும் அடித்தளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற மாற்றுத்திறனாளி மக்கள் ஆகியோருக்கு உடல் குறைபாடு காரணமாக வழங்கப்பட்டு வரும் நிதியுதவி, ஏறத்தாழ 27,412 பேர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.

இதனை இந்த மாதம் 14-ஆம் தேதிக்குள் வழங்குவதற்கு மத்திய அரசுக்கு நாங்கள் பரிந்துரை செய்திருக்கிறோம்.

விடுமுறை நாட்களாக இருந்த காரணத்தினால், நேற்றோ அல்லது முன்தினமோ அதனை வழங்கியிருக்க வேண்டும்.

நாளை திங்கட்கிழமை, விநாயகர் சதுர்த்தி முடிந்த அடுத்த நாளில், அத்தனை பேருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கு அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இடைத்தேர்தலை பொறுத்தவரை நாம் மாபெரும் வெற்றியை அடைவோம். நாம் எங்குச் சென்றாலும் அங்கே வெற்றிதான்.

மற்ற தொகுதிகளுக்கு வரும் 28-ஆம் தேதி அன்று தீர்ப்பு வழங்க இருக்கிறார்கள்.

உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைத்தவுடன், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட நாளில் தேர்தலை அறிவிக்கும் என்றார்.

Hindusthan Samachar / ANANDHAN