ஐரோப்பாவிலிருந்து முதல் நாடு கடத்தல் நடவடிக்கை - பஞ்சாப் காவல்துறை சாதனை
பஞ்சாப், 12 செப்டம்பர் (ஹி.ச.) பஞ்சாப் காவல்துறை ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து தனது முதல் நாடு கடத்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. ஜக்கு பகவான்பூரியா கும்பலுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான அம்ரித் தலாம் என்ற அம்ரித்பால் சிங்கை
ஐரோப்பாவிலிருந்து முதல் நாடு கடத்தல் நடவடிக்கை - பஞ்சாப் காவல்துறை சாதனை


பஞ்சாப், 12 செப்டம்பர் (ஹி.ச.)

பஞ்சாப் காவல்துறை ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து தனது முதல் நாடு கடத்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

ஜக்கு பகவான்பூரியா கும்பலுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான அம்ரித் தலாம் என்ற அம்ரித்பால் சிங்கை மால்டோவாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளதாக காவல்துறை இன்று அறிவித்துள்ளது.

குற்றவாளி அம்ரித் தலாம் 2024 அக்டோபரில் போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

'ஆபரேஷன் ஈஸ்டர்ன் ரீச்' என்ற பெயரில் ஆறு மாதங்கள் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட சர்வதேச தேடுதல் வேட்டைக்குப் பிறகு, அவர் மால்டோவாவில் கைது செய்யப்பட்டார். பஞ்சாப் காவல்துறையின் நான்கு பேர் கொண்ட குழுவினர் அவரை தங்கள் காவலில் எடுத்தனர்.

இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆயுதச் சட்ட மீறல்கள், போதைப்பொருள் தடுப்புச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 21 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நாடு கடத்தல் நடவடிக்கையை எல்லை கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான ஒரு முக்கிய திருப்புமுனை என்றும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்றும் பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குநர் விவரித்துள்ளார்.

பஞ்சாபின் கும்பல் தடுப்பு அதிரடிப்படை மற்றும் வெளிநாட்டு தப்பியோடிய குற்றவாளிகளை கண்காணிப்பு மற்றும் நாடு கடத்தல் பிரிவு ஆகியவை மத்திய அமைப்புகள் மற்றும் சர்வதேச கூட்டாளர்களுடன் இணைந்து தொடர் கண்காணிப்பு மற்றும் நெருக்கமான ஒருங்கிணைப்பு மூலம் இந்த நடவடிக்கை சாத்தியமானது.

கும்பல் தடுப்பு அதிரடிப்படை மற்றும் வெளிநாட்டு குற்றவாளிகள் பிரிவு குழுக்களின் முயற்சிகளை தலைமை இயக்குநர் பாராட்டியதுடன், இந்த சர்வதேச ஒத்துழைப்பில் ஈடுபட்ட மால்டோவா மற்றும் அஜர்பைஜான் அதிகாரிகள், சிபிஐ-யின் இன்டர்போல் பிரிவு, உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிற மத்திய அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்தார். குற்றவாளிகள் எங்கிருந்தாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவதில் பஞ்சாப் காவல்துறை உறுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கும்பல் தடுப்பு அதிரடிப்படையின் கண்காணிப்பாளர் பிக்ரம்ஜித் சிங் பிரார் கூறுகையில்,

இந்த நடவடிக்கை பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் மற்றும் தலைமை இயக்குநர் கவுரவ் யாதவ் ஆகியோரால் தொடங்கப்பட்ட கும்பல்கள் மற்றும் கொலையாளிகளை குறிவைக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும் என்றார்.

இந்த நடவடிக்கையை கும்பல் தடுப்பு அதிரடிப்படை தலைவர் பிரமோத் மான் மற்றும் வெளிநாட்டு குற்றவாளிகள் பிரிவு தலைவர் ஆஷிஷ் சவுத்ரி ஆகியோர் பல்வேறு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து மேற்பார்வையிட்டனர்.

தலாம் மால்டோவாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும், இது ஐரோப்பாவில் இருந்து பஞ்சாப் காவல்துறையின் முதல் வெற்றிகரமான நாடு கடத்தல் நடவடிக்கை என்றும் பிரார் குறிப்பிட்டார்.

ஹோஷியார்பூர் மாவட்டத்தில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் தலாமை காவலில் எடுக்க துணை கண்காணிப்பாளர்கள் உட்பட ஹோஷியார்பூர் காவல்துறை குழுவினர் வந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / vidya.b