தங்கம் வெள்ளி விலையில் அதிரடி மாற்றம்
சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.) செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று காலை, மாலை என இரு வேளையுமே தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. நேற்று காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில
தங்கம்


சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)

செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

அந்த வகையில் நேற்று காலை, மாலை என இரு வேளையுமே தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டது.

நேற்று காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் அதிரடியாக உயர்ந்தது.

கடைசியாக நேற்று மாலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.14,155க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,13,240க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து இன்றும் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,13,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000க்கும் விற்பனையாகிறது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P