கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை செயலாளர் நிர்மல்ராஜ் திடீர் ஆய்வு
சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.) சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை செயலாளர் நிர்மல்ராஜ் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்
கிளாம்பாக்கம்


சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)

சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை செயலாளர் நிர்மல்ராஜ் அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளுடன் நிர்மல்ராஜ் ஆலோசனை நடத்தினார்.

விநாயகர் சதுர்த்தி விடுமுறையின்போது செய்யப்பட்ட ஏற்பாடுகள் குறித்தும், ஆயுதபூஜை விடுமுறையில் மேற்கொள்ள வேண்டிய சிறப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதனிடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கும்பகோணம் செல்ல போதிய பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை எனக் கூறி பயணிகள், ஆய்வுக்கு வந்த செயலாளர் நிர்மல்ராஜை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பயணிகளின் குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள், விடுமுறை நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam