Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)
மேடையில் வாய்க்கு வந்தபடி மிரட்டும் தொனியில் மாண்புமிகு முதலமைச்சரைப் பற்றி பேசும் திமுகவினரின் செயல் அருவருக்கத்தக்கது என்றும், இதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி தெரிவித்துள்ளார்.
இதுதான் திமுகவின் அரசியலா? இதைத்தான் பேரறிஞர் அண்ணா உங்களுக்கு கற்றுக் கொடுத்தாரா? என கேள்வி எழுப்பிய அவர், பேரறிஞர் அண்ணாவின் பெயரை இனி பயன்படுத்துவதற்குக்கூட திமுகவினர் தகுதியில்லாதவர்களாக மாறிவிட்டதாக விமர்சித்துள்ளார்.
இவ்வாறு பேசியும் பேசியும்தான் இந்த நிலைக்கு வந்துள்ளீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், “வாயாலேயே கெட்டான்” என்பதைப் போல திமுகவினர் தொடர்ந்து கெட்டுக் கொண்டே வருவதாகவும் லயோலா மணி தெரிவித்துள்ளார்.
எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும், இடைத்தேர்தலில் மக்கள் மீண்டும் திமுகவுக்கு சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் என்றும் அவர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam