மதுரை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சித்திரை மற்றும் ஆவணி மூல வீதிகள் 2 நாட்களுக்கு போக்குவரத்திற்கு தடை விதிப்பு
மதுரை, 12 செப்டம்பர் (ஹி.ச.) மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெருவதையோட்டி மதுரை மாநகர காவல் துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, கோவிலை சுற்றி அமைந்துள்ள சித்திரை வீதிகள், ஆவணி மூ
Meenakshi Amman Temple


மதுரை, 12 செப்டம்பர் (ஹி.ச.)

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெருவதையோட்டி மதுரை மாநகர காவல் துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

கோவிலை சுற்றி அமைந்துள்ள சித்திரை வீதிகள், ஆவணி மூல விதிகள் மற்றும் மாசி வீதிகளில் 16 ஆம் தேதி இரவு 10 மணி முதல் 17 ஆம் தேதி இரவு வரை எந்தவொரு வாகனங்கள் நிறுத்துவதற்கும், செல்வதற்கும் மதுரை மாநகர காவல் துறை தடை விதித்துள்ளது.

மேலும், 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகளில் எந்தவொரு வாகனங்கள் நிறுத்துவதற்கும், செல்வதற்கும் மதுரை மாநகர காவல் துறை தடை விதித்துள்ளது.

இவ்வீதிகளில் கும்பாபிஷேகத்திற்கு செல்லக்கூடியவர்கள் நடந்து செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

16 ஆம் தேதி இரவு 10 மணி முதல் 17ஆம் தேதி இரவு 10 மணி வரை மதுரை நகருக்குள் சரக்கு வாகனங்கள் வந்து செல்ல தடை விதிக்கப்படுகிறது.

சரக்கு வாகனங்கள் புறவழிச் சாலைகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

கும்பாபிஷேகத்தை ஒட்டி மதுரை நகருக்குள் செல்லக்கூடிய பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.

C2 ரவுண்டானா, எல்லீஸ் நகர், TB ரோடு, வெஸ்டர்ன் பார்க் ஹோட்டல் ஆகிய 4 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 17 ஆம் தேதி கும்பாபிஷேக தினத்தன்று அனுமதி அட்டை உள்ளவர்கள் மட்டுமே சித்திரை வீதிகளில் அனுமதிக்கப்படுவார்கள்,

அனுமதி அட்டை இல்லாதவர்கள் கும்பாபிஷேகம் முடிந்த பிறகு சித்திரை வீதிகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

மதுரையின் 51 முக்கிய சந்திப்புகளில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

433 கண்காணிப்பு கேமராக்கள் வழியாக காவல்துறையினர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

குற்றவாளிகளை கண்டறிய 70 இடங்களில் நவீன FRS கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 40 குற்றத் தடுப்பு குழுவினர் ரோந்துப் பணிகளை மேற்கொள்வார்கள்,.

கூட்ட நெரிசலில் குழந்தைகள் காணாமல் போவதை தடுக்க கைப்பட்டைகள் அணிவிக்க 10 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் 6,500 காவல் துறையினர் கும்பாபிஷேக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் வியாபாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாநகர காவல் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN