‘நிர்மல்குமாருக்கு திமுகவை விமர்சிக்க அருகதை இல்லை - பரந்தாமன்
சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.) பல கட்சிகளால் விரட்டி அடிக்கப்பட்டு, உசிலம்பட்டியில் இருந்து வேறு தொகுதிக்குச் சென்று போட்டியிட்ட நிர்மல்குமாருக்கு திமுகவையும், தன்னையும் விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை என திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் தெ
Paranthaman


சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)

பல கட்சிகளால் விரட்டி அடிக்கப்பட்டு, உசிலம்பட்டியில் இருந்து வேறு தொகுதிக்குச் சென்று போட்டியிட்ட நிர்மல்குமாருக்கு திமுகவையும், தன்னையும் விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை என திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பல கட்சிகளில் இருந்து விலகி வந்த நிர்மல்குமார், உசிலம்பட்டியில் இருந்து வேறு தொகுதியில் போட்டியிட்டதாக விமர்சித்துள்ளார். எனவே, திமுக மற்றும் தன்னைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை என்றும் பரந்தாமன் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘சோஃபா கோஷ்டி’ என குறிப்பிட்டு த.வெ.க.வை விமர்சித்துள்ள பரந்தாமன், அடுத்த கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுக்கு அந்தக் கட்சி எதை எதையோ ‘டெப்பாசிட்’ செய்ததால்தான் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த இடைத்தேர்தலில் திமுகவுக்கு மக்கள் வெற்றியைத் தருவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் நிலவும் மின்வெட்டு காரணமாக த.வெ.க.வுக்கு இந்த இடைத்தேர்தல் மட்டுமின்றி, இனி நடைபெற உள்ள அனைத்து தேர்தல்களிலும் பின்னடைவு ஏற்படும் என்றும் பரந்தாமன் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த தேர்தல் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக ‘பல கட்சி பலராமன், பொய் வாயன் நிர்மல்குமார்’ இருப்பார் என கடுமையாக விமர்சித்துள்ள அவர், த.வெ.க. மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P