Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 செப்டம்பர் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் நிலவி வரும் தொடர் மின்வெட்டு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் இது குறித்து மின்சார துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்தில்,
காற்றாலை மின்சாரம் தடைபட்டதால் இரண்டு நாட்கள் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு.
நேற்று மாலை தமிழகத்திற்கு தேவையான மின்சாரம் பொது விநியோகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.
நேற்று மாலை முதல் அனைத்து இடங்களிலும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இது தமிழகத்தில் மட்டுமல்ல பெரும்பாலான மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாடு தமிழகத்தில் நேற்று மாலை முதல் போதுமான மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்து கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN