செங்குறிச்சி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் - 2 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
கள்ளக்குறிச்சி, 12 செப்டம்பர் (ஹி.ச.) விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறையையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால், சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் கார்
போக்குவரத்து நெரிசல்


கள்ளக்குறிச்சி, 12 செப்டம்பர் (ஹி.ச.)

விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறையையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால், சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதனால் கார், வேன், பேருந்து உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வா கனங்கள் ஒரே நேரத்தில் தென் மாவட்டங்களை நோக்கி சென்றதால், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை–திருச்சி ஜிஎஸ்டி சாலையில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், சுங்கச்சாவடியை கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், சுங்கச்சாவடி நிர்வாகம் எதிர்திசையில் உள்ள 2 வழித்தடங்களை தென் மாவட்டங்களை நோக்கிச் செல்லும் வாகனங்களுக்காக திறந்துள்ளது.

மேலும், போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்தில் வாகனங்களை ஒழுங்குபடுத்தி நெரிசலை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சாலையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam